தமிழில் பிரம்மன் மற்றும் மாயவன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் லாவண்யா திரிபாதி. அதைத்தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த லாவண்யா திரிபாதி, சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் வருண் தேஜ் உடன் காதல் வசப்பட்டார். இவர்கள் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் குடும்ப பெயரான கொனிடேலா என்கிற பெயரை தன்னுடைய பெயருடன் இணைத்துக் கொண்டுள்ளார் லாவண்யா திரிபாதி. தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்திலும் இந்த பெயரை அப்டேட் செய்துள்ளார்.