Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மாமா மன்சு அல்லுடு கன்சு (தெலுங்கு)

மாமா மன்சு அல்லுடு கன்சு (தெலுங்கு),mama manchu alludu kanchu
  • மாமா மன்சு அல்லுடு கன்சு (தெலுங்கு)
  • இயக்குனர்:
26 டிச, 2015 - 17:08 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மாமா மன்சு அல்லுடு கன்சு (தெலுங்கு)

நடிகர்கள் - மோகன் பாபு, அல்லரி நரேஷ்

நடிகைகள் - மீனா, ரம்யா கிருஷ்ணன், பூர்ணா

இயக்குனர் - ஸ்ரீநிவாச ரெட்டி


மாமா மன்சு அல்லுடு கன்சு எனும் ஒரு பொழுது போக்கு படத்தில் தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகர் மோகன் பாபு மற்றும் நகைச்சுவை நாயகன் அல்லரி நரேஷ் இணைந்து நடித்திருக்கிறார்கள். மோகன் பாபுவிற்கு இரண்டு மனைவிகள். அதில் ஒருவரின் மகளாக நடிகை பூர்ணா.எதிர்பாராதவிதாமாக மோகன் பாபுவின் மகளான பூர்ணாவிற்கு தனது தந்தையின் இன்னொரு மனைவியின் மகனான வருண் சந்தோஷ் மீது ஈர்ப்பு வருகிறது.


இப்படிபட்ட ஒரு எதிர்பாராத சூழ்நிலையைக் கையாள மோகன் பாபு, அல்லரி நரேஷை தன் மகளின் கவனத்தை திசை திருப்ப நியமிக்கிறார். இப்போது மீண்டும் காட்சிகள் மாறுகிறது. பிரச்சனையைக் கையாள வந்த நரேஷ் இப்போது பூர்ணாவின் மீது மையல் கொள்கிறார். இது மட்டும் போதாது என்று மோகன்பாபுவிற்கும் குடைச்சல் கொடுக்கிறார்.இந்த இரு பிரச்சனைகளை எப்படி மோகன் பாபு சமாளித்தார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.


படம் முழுக்க பல பிரபலங்கள் இருந்தாலும் படத்தை தாங்கி பிடிப்பது என்னவோ மோகன் பாபுதான். இத்தனை வயதிலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார். எப்போதும் போல் அல்லரி நரேஷ் இந்த படத்தில் தன்னால் முடிந்த வரை தனது கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார்.மோகன் பாபுவின் இரு மனைவிகளாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் மீனா தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சரியாக செய்திருக்கிறார்கள். முக்கியமான சில முடிச்சுகள் இவர்களை சுற்றிதான் நிகழ்கிறது.


படத்தின் இயக்குனர் ஸ்ரீநிவாச ரெட்டி தான் எடுத்துக்கொண்ட கதைக்கு சரியாக உழைத்திருக்கிறார். படத்தில் நகைச்சுவை காட்சிகளை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார். படம் கொஞ்ச நேரம் ஓடிய பின்பு அனேக காட்சிகளை ரசிகர்களால் யூகிக்க முடிகிறது. இதனால் பார்பவர்களுக்கு ஒரு சுவாரஸ்யம் இல்லாமல் போகிறது. இதையெல்லாம் திரைக்கதையில் தவிர்த்திருந்தால் இன்னும் படம் நன்றாக இருந்திருக்கும். மொத்தமாக மோகன் பாபுவிற்கு இது ஒரு முக்கியமான படம் என்று சொல்லலாம்.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in