நாயகன் - அக்கினேனி அகில்
நாயகி - சேஷா சைகள்
இயக்குனர் - விவி விநாயக்
டோலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதிகளான நாகார்ஜுனா - நடிகை அமலாவின் மகன் அகில், நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ''அகில் : தி பவர் ஆப் ஜுவா''. ஏற்கனவே “மனம்” திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போகும் அக்கினேனி அகில், நாயகானாக அறிமுகமாகி இருக்கும் அகில் படத்தை கமர்சியல் படத்திற்கு பெயர் போன இயக்குனர் வி.வி. விநாயக் இயக்கியிருக்கிறார். ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ள இப்படம் அவர்களின் ரசனையை பூர்த்தி செய்துள்ளதா என பார்ப்போம்.
தெலுங்கு தேசத்தில் ஃபேண்டஸி பாணி படங்களின் வருகை குறைவுதான், அந்த வகையில் சிறிது தொடர்புடைய படம் தான் இது. அதற்காக முழுக்க முழுக்க ஃபேண்டஸி படம் என நினைத்துவிடாதீர்கள் வழக்கமான கமர்ஸியல் அம்சங்களுடன் எப்போதும் எதிர்பார்க்கும் ஹீரோயிஸத்துடன் இப்படம் இருக்கிறது. படத்தில் சொல்ல எடுத்துக்கொண்ட கதையின் பின் புலம் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. குழுவினரும் திரைக்கதையை படமாக்குவதில் தங்கள் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள்.
அகில் சாதாரணமாக கல்லூரி போய் வரும் இளைஞன், அங்கே நாயகி திவ்யாவை பார்க்கிறான். வழக்கம் போல் அவர்கள் இடையே காதலும் வருகிறது. இருவரும் காதல் கொள்கிறார்கள். இந்நிலையில் திவ்யா, தென் ஆப்பிரிக்க ஆட்களால் கடத்தப்படுகிறாள், அவர்கள் ஏற்கனவே ஜுவா என்னும் அதிசயப் பொருளையும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏன் திவ்யா கடத்தப்படாள்? அவளுக்கும் ஜுவா -க்கும் என்ன சம்பந்தம்? இதை எல்லாம் அகில் கண்டு பிடித்தாரா, நாயகியை மீட்டாரா? என்பதே அகில் படத்தின் மீதிக் கதை.
அகில் தனது முதல் படத்தில் நன்றாக தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் நடனக்காட்சிகளிலும் அழகாக கவனம் ஈர்கிறார். வசனங்களை வெளிப்படுத்தும் போது உடல் மொழியும் , குரலும் நன்றாக இருக்கிறது. முக பாவனைகளில் இன்னும் பயிற்சி தேவை. அறிமுக படத்தில் இதை குறையேன்று யாரும் சொல்லவும் முடியாது.அவ்வளவு நேர்த்தியை நடனத்திலும் சண்டை காட்சிகளிலும் காட்டியிருக்கிறார். இவரது அறிமுக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்த விதம் நல்ல ரசணை.
சேஷா சைகள் தெலுங்கு தேசத்திற்கு ஒரு அழகிய அறிமுகம். கூடிய விரைவில் இவரை பல படங்களில் நாயகியாக பார்க்கலாம். படம் ஆரம்பத்தித்தும் இடைவேளை வரை நகர்வதும் வேகமாக நடக்கிறது. அனேக இடங்களில் காமெடி காட்சிகள் சரியாக பொருந்தி போகிறது. இப்படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் வேலை செய்திருக்கிறார்கள், அனுப் ரூபன் பாடல்களின் வாயிலாக கவனம் ஈர்க்க, பின்னணி இசையில் தடதடக்க வைக்கிறார் மணிசர்மா.
ஒரே ஒரு பிரச்சனை என்றால் , இரண்டாம் பாதி திரைக்கதை அதுவும் படம் தென்னாப்பிரிக்கா சென்றதும் புது கதாபாத்திரங்கள் வேறு அறிமுகாமகிறது அது போகட்டும் என்று விட்டாலும் படத்தின் வேகம் இரண்டாம் பாதியில் மட்டுப்படுகிறது. திரைக்கதையில் காட்டிய அக்கரையை ,கிராபிஸிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம், நீருக்கடியில் நடக்கும் கட்சிகளுக்கும் இறுதி சண்டை காட்சிளுக்கும் இன்னும் மெனெகெட்டிருக்கலாம்.
புது பின்புலம், புது முக நடிகர்களை வைத்து எல்லோரும் ரசிக்கும் படியான ஒரு படத்தை வி.வி.விநாயக் கொடுத்திருக்கிறார். பலவீனத்தை சற்றே கவனித்திருந்தால் இன்னும் படம் நன்றாக வந்திருக்கும்.மொத்தனாக அகிலின் அறிமுகப்படத்தை ஒரு வெற்றிப்படமாக கொடுத்திருக்கிறார்.
அகில் - சுவாரஸ்யமானவன்