தினமலர் விமர்சனம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தைத் அடுத்து, அஜித்குமார் நடித்துள்ள படம் , அஜித் - ஸ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்துள்ள படம் , லட்சுமி மேனன் .,அஜித்தின் தங்கை யாக லீட்ரோல் ஏற்றிருக்கும் திரைப்படம் , அனிருத் இசையில் அஜித் நடித்துள்ள படம் ... என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்திருக்கும் வேதாளம் படம்., அந்த எதிர்பார்ப்புகளை எந்தளவிற்கு பூர்த்தி செய்துள்ளது பார்ப்போம் ...
கதைப்படி ., கணேஷ் எனும் அஜித் , தன் பாசத்தங்கை தமிழ் எனும் லட்சுமி மேனனின் படிப்பிற்காக கொல்கத்தாவில் குடியேறி வாழ்ந்து வருகிறார். அஜித்துக்கு ,இன்னொரு பெயரும், முகமும் இருக்கிறது. அது தான் இன்டர்வெல்லுக்கு அப்புறம் ப்ளாஷ்பேக்கில் விரியும் ., அஜித்தின் வேதாளம் எனும் லோக்கல் ரவுடி கெட்அப்பும் , லட்சுமி மேனன் அஜித்தின் தத்து தங்கையானதால் ., அஜித், இண்டர்நேஷனல் பெண் கடத்தல்காரர்களை எதிர்த்து , துரத்தி, துரத்தி கொல்லும் ,கொடூர முகமும் ஆகும். காசேதான் கடவுளடா ... என வாழும் அஜித் , .. தமிழ் எனும் லட்சுமி மேனனின் பாசக்கார அண்ணனாக மாறக் காரணம் என்ன? கொல்கத்தாவில் வெறும் கால் டாக்ஸி டிரைவராக இருந்துகொண்டு , இண்டர்நேஷனல் தாதா சகோதரர்களையெல்லாம் தான் இருக்கும் இடத்திற்கு வரவழைத்து தீர்த்து கட்டுவது ஏன்? அஜித் - ஸ்ருதிக்கு இடையேயான உறவு என்ன? படத்தில் பரோட்டா சூரியின் பங்களிப்பு என்ன... ? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும் , விறுவிறுப்பாகவும் விடை அளிக்கிறது அஜித்தின் வேதாளம் பட மீதிக் கதை!
தங்கை லட்சுமி மேனனின் இந்த நிலைக்கு காரணமானவர்களை , அவரது பாசக்கார டாக்சி டிரைவர் அண்ணன் அஜித், சஸ்பென்சாய் தன் ஸ்டைலில் பழிவாங்குவதில் தொடங்குகிறது வேதாளம் படத்தின் வேகம் அதன் பின் இன்டர்வெல் வரை பரபரப்பாக செல்லும் திரைக்கதை .,அதன் பின் ப்ளாஷ்பேக் சென்டிமெண்ட் காட்சிகளில் சற்றே நொண்டியடிக்கிறது. அஜித் -ஸ்ருதிஹாசனின் காதலும் கூட போலியாக போர் அடிக்கும் தன்மையுடன் படமாக்கப்ப்ட்டிருப்பது பலவீனம் .
அஜித் குமார் ., தான் ஒரு அல்டிமேட் ஸ்டார் என்பதை பிரேம் டூ பிரேம் நிருபித்திருக்கிறார். கணேஷாக அமைதியாகவும் , வேதாள மொட்ட தலயாகவும், தல எப்போதும் போல இப்படத்திலும் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.காசேதான் கடவுளடா ... உள்ளிட்ட பழைய பாடல்களை அடிக்கடி அவர் முணுமுணுத்தபடி இருக்கும் போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. மனிதர் சால்ட் & பெப்பர் ஹேர் லுக்கில் என்ன மாய் இருக்கிறார்.... எனும் , ரசிகர்களின் கமெண்ட் வேறு காதை பிளக்கிறது.
நீ ஒரு தேசத் தலைவன் , நான் ஒரு தேசத் தலைவன் ., சொன்னதை சொன்ன மாதிரி செய்றதுக்கு ... நீ ஒரு கெட்டவன் , நான் ஒரு கேடு கெட்டவன் ... என்று பன்ச் அடித்தபடி , அஜித் ., எதிராளிகளை பாய்ந்து அடிக்கும் இடங்கள்.. சூப்பர் ப்..! அதே போன்று, காசுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன். ஆனா தன்மானத்துக்கு ஒண்ணுன்னா தலயே போனாலும் விட மாட்டேன் என அஜித் ஆக்ஷனில் இறங்கும் இடங்கள் ., நம்ம நாட்டுல பெண்கள் ஏன் தெரியுமா? முன்னால போக முடியல ..? பின்னாடி எவனாவது வர்றானான்னு ... பார்த்துகிட்டே போக வேண்டி இருப்பதால் தான் .... என பெண்ணுரிமை பேசுவது வரை ., அல்டிமேட் ஸ்டார் ., அல்டிமேட் தான்! கண்டெய்னரில் வெளிநாட்டுவெறியர்களுக்கு கடத்தப்பட இருந்த பெண்களை காபந்து செய்வது, தங்கையை தத்தெடுப்பது ., இண்டர்நேஷனல் வில்லன்களை பொலி போடுவது ... என எம் ஜி ஆர் .பாணியில் அஜித் எதை குறி வைக்கிறாரோ .? எனும் சந்தேகம் சாமான்ய ரசிகனுக்கும் நிச்சயம் கிளம்பும் !
முதுகுல குத்துப்பட்டிருக்கு... எனப் பதறும் லட்சுமி மேனனிடம் , ஏய் ,பொண்ணு நீ, கிளம்பு ,
"என்னை.... நிறைய பேரு முதுகுல குத்தியிருக்காங்க... என .. சமயம் பார்த்து ., டயலாக் அடித்து ரசிகர்களிடம் க்ளாப்ஸ் வாங்குவது ... என வெளுத்து வாங்கி இருக்கிறார் அஜீத்.
ஸ்ருதிஹாசனுடனான காதல் இல்லா காதல்காட்சிகளிலும், தத்து , தங்கை பாசத்திலும் கூட அஜித் அசரடித்திருக்கிறார்!
அஜித்தின் ஜோடியாக பேருக்கு வரும் ஸ்ருதிஹாசன் வழக்கம் போலவே படபடவென பொரிந்து தள்ளும் ரோலில் கொஞ்ச நேரமே வந்தாலும் ஜமாய்த்திருக்கிறார்.
அஜித்தின் அன்பு , பாசத்திற்குரிய தத்து தங்கையாக லட்சுமி மேனன் படம் முழுக்க பக்காவாக நிரம்பி இருக்கிறார்.
சூரியின் காமெடி ,அவர் இப்படத்தில் அடிக்கடி உச்சரிப்பது மாதிரியே ஹாசம்!
நான் கடவுள் ராஜேந்திரன் ,கோவை சரளா ,மயில்சாமி , அப்புக்குட்டி , பாலசரவணன் , சுவாமிநாதன் ,மன்சூர் அலிகான் , சுக்ரன் ,ஸ்ரீ ரஞ்சனி , மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கிருக்கின்றனர் . அதிலும் அந்த இத்தாலி வில்லன் கர்ணகொடூரம்!
அனிருத்தின் இசை யில் ... ஆலுமா ,டோ லுமா .. . உள்ளிட்ட பாடல்கள் மனதில் பச்சக். என ஒட்டிக் கொள்ளும் ரகம்! ராகம்!
ஒளிப்பதிவாளர் வெற்றி, வெற்றியின் பதிவு , ஓப்பனிங் இத்தாலி ஏர்போர்ட் சீனிலேயே மிரட்டல். படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குனர் மிலன் உள்ளிட்டவர்களின் பணியும் போற்றத்தக்கது!
வீரம் படத்தை அடுத்து சிறுத்தை சிவாவின் இயக்கததில்அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடித்திருக்கும் வேதாளம்., ஒரு சில லாஜிக் குறைகள் இருந்தாலும் ரசிகர்களுக்கு அமர்க்களம்! நிச்சயம் வசூலில் அசத்தலாம்!!