ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

சிவா இயக்கத்தில், அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'வேதாளம்'. அப்படத்தை தெலுங்கில் 'போலா சங்கர்' என ரீமேக் செய்தார்கள். மெஹர் ரமேஷ் இயக்க, சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.
வழக்கம் போல சிரஞ்சீவி ரசிகர்கள் காலை சிறப்புக் காட்சிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பில் படம் பார்க்கச் சென்றுள்ளார்கள். ஆனால், படம் 'வேஸ்ட்' ஆகிவிட்டதாக அவர்கள் புலம்புகிறார்கள். தெலுங்கிற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்களாம். அண்ணன், தங்கை சென்டிமென்ட்டை மட்டும் அப்படியே வைத்திருக்கிறார்கள். சிரஞ்சீவி மட்டுமே படத்தில் ரசிக்கும்படியாக நடித்திருக்கிறார் என்றும், மற்றவர்கள் நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.
ரீமேக் படங்களின் காலம் அழிந்துவிட்ட நிலையில் எட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தை ரீமேக் செய்வதா என்பதே பலரது கருத்தாக உள்ளது.




