Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

ஜானிசார் (ஹிந்தி)

ஜானிசார் (ஹிந்தி),Jaanisaar
  • ஜானிசார் (ஹிந்தி)
30 ஆண்டுகளுக்கு பிறகு முஷாபர் அலி இயக்கியிருக்கும் படம் இது.
08 ஆக, 2015 - 15:25 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » ஜானிசார் (ஹிந்தி)

ஹீரோ : இம்ரான் அப்பாஸ்

ஹீரோயின் : பெர்னியா குரேஷி

இயக்கம் : முஷாபர் அலி

தயாரிப்பு : மீரா அலி


சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் 1877ம் ஆண்டு கதைகள் நடப்பது போன்று வௌிவந்திருக்கும் திரைப்படம் தான் ஜானிசார். இந்தப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது என்று இனி பார்ப்போம்...


ஆங்கிலேயேர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இந்திய கலாச்சாரத்தையும், இந்தியர்களை எப்படி மதம் மாற செய்தார்கள் என்பதையும் விளக்கும் படம் தான் ஜானிசார் படத்தின் ஒருவரிக்கதை.


ஹீரோ ராஜா அமீர் ஹைடர் எனும் இம்ரான் அப்பாஸ், தனது பெற்றோரின் வற்புறுத்தலால் சின்ன வயதிலேயே இங்கிலாந்திற்கு படிக்க செல்கிறார். படித்து முடித்துவிட்டு இந்தியா திரும்புகிறார் இம்ரான். வந்த இடத்தில் நடன கலைஞரான நூர் எனும் பெர்னியா குரேஷியின் அழகில் மயங்கி காதல் வருகிறது. இவர்களது காதல் கை கூடியதா எனும் கதையுடன், மதம் என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் எப்படி இந்தியர்களை மதம் மாற வைக்கின்றனர் எனும் விஷயத்தையும் சொல்லியிருக்கிறது ஜானிசார் படத்தின் கதை.


இம்ரான் அப்பாஸ், ராஜா அமீர் ஹைடர் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.


ஹீரோயின் பெர்னியா குரேஷி ஏதோ நடித்திருக்கிறார் என்ற அளவில் தான் உள்ளார். உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் சுத்தமாக அவருக்கு நடிக்க வரவே இல்லை.


இப்படத்தின் இயக்குநரான முஷாபர் அலியும் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். அவரது நடிப்பு ஓ.கே.


ஜானிசார் படத்திற்கு ப்ளஸே ஔிப்பதிவு தான். அந்தக்காலத்து காட்சிகளை அற்புதமாக படம்பிடித்திருக்கிறார்கள். அதேப்போல் படத்தின் வசனங்களும் கவருகின்றன. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் படம் இயக்கியிருக்கும் முஷாபர் அலி, உம்ராவ் ஜான் படத்தில் காண்பித்த மேஜிக்கை ஜானிசார் படத்தில் காட்ட தவறிவிட்டார் என்றே சொல்ல வைக்கிறது.


நேரத்தையும், பணத்தையும் வீணடிக்க வேண்டாம் என்பதை சொல்லாமல் சொல்கிறது ஜானிசார் படம்!


ரேட்டிங் - 2/5



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in