நடிகர்கள் : அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, இர்பான் கான்
இயக்குநர் : சூஜித் சிர்கார்
தயாரிப்பாளர் : என்.பி.சிங், ரோனி லாஹிரி, ஸ்ஜேகா ரஜனி
இசை : அனுபம் ராய்
தினமலர் விமர்சனம்
அப்பாவுக்கும் - மகளுக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை கொஞ்சம் காமெடி கலந்து சொல்லி வௌிவந்திருக்கும் படம் தான் பிகு. இந்த பிக்கு ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...
பிகு எனும் தீபிகா படுகோனே கடுமையாக உழைக்கும் இளம் பெண். இவரது அப்பா பாஸ்கர் பேனர்ஜி எனும் அமிதாப். 70 வயதான தன் அப்பாவை கண்ணும் கருத்தமாக கவனித்து வருகிறார். தன்னுடைய வேலைகளையும் பார்த்து கொண்டு, தன் அப்பாவையும் கவனித்து வரும் பாச மகளாக திகழ்கிறார் பிகு. ஒருநாள் தங்களது சொந்த ஊரான கோல்கட்டாவுக்கு தீபிகாவுகம், அமிதாப்பும் காரில் பயணம் செய்கின்றனர். இவர்களுக்கு கார் டிரைவராக ராணா எனும் இர்பான் கான் வருகிறார். அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சம் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் சூஜித் சிர்கார்.
பிகு படத்தின் பெரிய பலமே பகுவான் தீபிகா படுகோனே தான். படம் முழுக்க அவரது நடிப்பு வாவ் சொல்ல வைக்கிறது.
அமிதாப் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த வயதிலும் என்னமா நடிக்கிறார்.
இர்பானின் நடிப்பு சில இடங்களில் சூப்பராகவும், சில இடங்களில் போரடிக்கும் வகையிலும் தெரிகிறது.
கமல்ஜீத் நெகியின் ஔிப்பதிவு அழகு ஓவியம். குறிப்பாக கோல்கட்டாவில் படமாக்கப்பட்ட காட்சிகள் அவ்வளவு நேர்த்தியாகவும், ரம்மியமாகவும் தெரிகிறது. அனுபம் ராய் இசையில் ஒரு சில பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. அதேசமயம் சில பாடல்கள் படத்தை மெதுவாக நகர்த்துகிறது.
பிகு படத்தின் மூலம் ரசிகர்களின் பல்சை எகிற வைக்கிறார் இயக்குநர் சூஜித் சிர்கார். அமிதாப், தீபிகா, இர்பான் ஆகிய மூவரின் கேரக்டரையும் அவ்வளவு அழகாக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அதேசமயம் தனது பல இடங்களில் ரசிகர்களுக்கு சமூக சார்ந்த பல கருத்துக்களையும் சொல்ல தவறவில்லை இயக்குநர் சூஜித்.
மொத்தத்தில், ''பிகு'' - குடும்பத்தோடு கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!!