படம் குறித்து இயக்குனர் எஸ்.கே.முரளீதரன் கூறும்போது, கிராமத்தில் படித்த ஒரு இளைஞன் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனுக்கு பணக்கார பெண் ஒருவள் மீது காதல் வருகிறது. அதனால் அவனது அம்மாவுக்கு ஏற்பட்ட அவமானத்தால் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
பொறுப்பில்லாமல் இருந்த அவன் சமுதாய சம்மந்தப்பட்ட பிரச்சினை ஒன்றை கையிலெடுத்து ஜெயிக்கிறான். ஊரே மெச்சுகிறது. அவனது காதல் ஜெயித்ததா? என்பதை கமர்ஷியலாக உருவாக்கியுள்ளோம் என்றார். இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல மெசேஜ் சொன்ன திருப்தி இருக்கு என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, அரக்கோணம், சோளிங்கர், ஊட்டி, திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.