இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
படம் : உள்ளம் கேட்குமே
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : ஷாம், ஆர்யா, லைலா, அசின், பூஜா
இயக்கம் : ஜீவா
தயாரிப்பு : மகாதேவன் கணேஷ்
ஒளிப்பதிவாளர் ஜீவா, வித்தியாசமான திரைக்கதையுடன் இயக்குனராக அறிமுகமான படம் 12 பி. அதற்கு அடுத்ததாக, 2002ல், பெப்சி என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார். பல்வேறு தடைகளை, இப்படம் சந்தித்தது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, ஒரு வழியாக, 2005ம் ஆண்டு தான் படம் வெளியானது. படத்தின் பெயர், உள்ளம் கேட்குமே என மாறியது.
ஆர்யா, பூஜா மற்றும் அசின் ஆகியோர், தமிழ் சினிமாவின் முதன் முறையாக அறிமுகமாகிய படம் இது தான். படப்பிடிப்பு தாமதத்தால், ஆர்யா நடிப்பில், அறிந்தும் அறியாமலும்; அசின் நடிப்பில், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி; பூஜா நடிப்பில், ஜே ஜே படமும் ரிலீஸாகிவிட்டது. சினிமா வரலாற்றில், தாமதமாக வெளியாகும் படம் வெற்றி பெறுவதில்லை. இப்படம், ஒரு வாரத்தில் தியேட்டரில் இருந்து வெளியேறியது. அடுத்த சில நாட்களில், 'ரீ ரிலீஸ்' செய்தபோது, படம் வெற்றி பெற்றது.
கல்லுாரி நண்பர்களான ஐந்து பேர் இடையே உருவாகும் காதலும், பிரிவும் தான், படத்தின் திரைக்கதையாக மாற்றியிருந்தார், ஜீவா. இப்படம் பலருக்கு, அவர்களின் கல்லுாரி வாழ்க்கையை நினைவூட்டியது. படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருந்தாலும், பலரின் மனதை கொள்ளைக் கொண்டது, லைலா தான்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், 'ஓ மனமே, என்னை பந்தாட, மழை மழை, லேகோ லைமா...' உள்ளிட்ட பாடல்கள் ரசிக்கச் செய்தன. படத்தின் வெற்றிக்கு பாடல்களும், ஜீவாவின் ஒளிப்பதிவும் முக்கிய காரணங்களாக இருந்தன. இப்படம், தெலுங்கில், ப்ரேமின்சி சூடு என்ற பெயரில், டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
கல்லுாரி நாட்களில் மீண்டும் வாழ்ந்திட, உள்ளம் கேட்குமே!