வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
படம் : 7ஜி ரெயின்போ காலனி
வெளியான ஆண்டு : 2004
நடிகர்கள் : ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால்
இயக்கம் : செல்வராகவன்
தயாரிப்பு : ஏ.எம்.ரத்னம்
காதலி இறந்த பின்னும், அவள் நினைவோடு வாழும் காதலன். இது தான், 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கரு. காதல் கொண்டேன் படத்தின் வழியாக வெளிச்சம் பெற்ற இயக்குனர் செல்வராகவன், இப்படத்தின் மூலம் தனித்துவமான இயக்குனராக, கவனம் பெற்றார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன், ரவி கிருஷ்ணா, இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
'ஹவுசிங் போர்ட்' குடியிருப்பில் வாழும், நடுத்தர வர்க்க குடும்பத்தையும், அங்கு வளரும் இளைஞர்களின் வாழ்வையும், வெகு இயல்பாக பதிவு செய்தது, 7ஜி ரெயின்போ காலனி. சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதி தான், இதில் நாயகியாக நடித்தார். சில காரணங்களால், படத்தில் இருந்து விலக, சோனியா அகர்வால் நாயகியானார்.
'கதிர் - அனிதா' கதாபாத்திரங்களில் ரவி கிருஷ்ணாவும், சோனியா அகர்வாலும் வாழ்ந்திருந்தனர் எனலாம். நாயகனின் தந்தையாக நடித்த விஜயன், நம் தந்தையை கண்முன் நிறுத்தினார். அவர், 'அவனுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன்' என சொல்லி கண்ணீர் சிந்தும்போது, தியேட்டரின் கனத்த மவுனம் நிலவியது.
இந்த ஒரு படத்துக்கு மட்டும், 25 தீம் இசைத் துணுக்குகளை உருவாக்கியிருந்தார், யுவன் சங்கர் ராஜா. இசையின் வழியே உணர்வுகளை கடத்தியிருந்தார். அவரின் இசைப் பயணத்தில், 7ஜி ரெயின்போ காலனி மிக முக்கிய படம் .நா.முத்துக்குமாரின் வரிகள், இளைஞர்களை என்னவோ செய்தது. 'நினைத்து நினைத்து பார்த்தால், கனா காணும் காலங்கள், நாம் வயதுக்கு வந்தோம், கண் பேசும் வார்த்தைகள், இது போர்க்களமா, ஜனவரி மாதம், நினைத்து நினைத்து பார்த்தேன்...' ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
வசூலை வாரி குவித்த இப்படம் தெலுங்கு, பெங்காலி, ஒடியா, கன்னடம், ஹிந்தி என, பல்வேறு மொழிகளில், 'ரீமேக்' செய்யப்பட்டது.
7ஜி ரெயின்போ காலனியை மறக்க முடியுமா?