சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
ஷாருக்கான் சினிமாவில் நடித்து 3 ஆண்டுகள் ஆகிறது. கடைசியாக 2018ல் வெளிவந்த ஜீரோ படத்தில் நடித்தார். அந்த படத்தின் தோல்வியில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்திருக்கிறார். வார் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் மற்றும் அட்லீ இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களுக்கு பிறகு பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராஜ்குமார் ஹிராயினியுடன் இணைகிறார். 3 இடியட்ஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ், பிகே உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இந்த படம் இந்தியாவில் இருந்து கிளம்பி வெளிநாட்டில் சட்டவிரோதமாக குடியேறும் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசப்போகிறது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்திலிருந்து பல்வேறு இளைஞர்கள் வெளிநாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேற முனைகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாகச் செல்ல முடியாத இவர்கள், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி, பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட்டு அங்கிருந்து அமெரிக்கா அல்லது பிரிட்டன் நாடுகளில் குடியேறுகின்றனர். இதுபற்றிய படமாக உருவாகிறது.
கனடாவுக்குச் செல்ல விரும்பும் ஒரு பஞ்சாபி இளைஞனின் கதையுடன் இந்த பிரச்சினையை பேச இருக்கிறார் ராஜ்குமார் ஹிரானி. அந்த இளைஞனாக ஷாருக்கான் நடிக்கிறார்.