தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
சினிமாக்களில் ரீல் வில்லனாக நடித்து வந்த பாலிவுட் நடிகர் சோனு சூட், கடந்த ஆண்டு கொரோனா தாக்கம் துவங்கியது முதல் தற்போது வரை பலருக்கும் பலவிதமான உதவிகளை செய்து ரியல் ஹீரோவாக மாறிவிட்டார். அந்த வகையில் அவருக்கு பாராட்டுகளும், உதவிகள் கேட்டு பல திசைகளில் இருந்து கோரிக்கைகளும் வந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சோனு சூட்டை தங்கள் அரசு புதிதாக கல்வி தொடர்பாக துவக்கியுள்ள திட்டத்திற்கு தூதராக நியமித்துள்ளார்.
சமீபத்தில் சோனு சூட்டுடன் இதுகுறித்து கலந்தாலோசித்த பின்னர், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, “கடந்த ஒரு வருடமாக கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும்போது, தான் கல்விக்காக என்னென்ன செய்ய வேண்டி இருக்கிறது என்கிற ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டது. தற்போது கிடைத்துள்ள இந்த பொறுப்பு, மாணவர்களிடம் இன்னும் மிக நெருக்கமாக செல்லவும் அவர்கள் தேவையறிந்து உதவவும் பயன்படும்” எனக் கூறியுள்ளார்.