'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' | அரசுக்கே 'ஆப்பு' அடிக்கப்பார்த்த ஆர்.கே.செல்வமணி: முறைகேடுகளை மறைக்க முயற்சி? |

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமாகி ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானவர். தமிழில் குஷி, மிஸ்டர் ரோமியோ படங்களில் நடித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வியான், சமீசா ஷெட்டி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஷில்பா ஷெட்டிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளத்திலும் தீவிரமாக இருக்கும் ஷில்பா, உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அவர் வெளியிடும் உடற்பயிற்சி வீடியோகள் சமூகவலைதளங்களில் வைரலாகும்.
இந்நிலையில் நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ராவை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆபாச படங்களை தயாரித்து அதற்காக பிரத்யேக செயலிகளை உருவாக்கி அதை பயன்பாட்டிற்கு விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ராஜ் குந்த்ரா கைது இந்திய சினிமா வட்டாரத்தில் பெரிய பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டில் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அதன்பின் இன்று அதிகாலை மும்பை ஜேஜே மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக ராஜ் குந்த்ரா அழைத்து செல்லப்பட்டு அதன்பின் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களை தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இது குறித்து மும்பை காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது : '2021, பிப்ரவரி மாதம் மும்பை குற்றப்பிரிவு போலீசார், ஆபாச படங்கள் எடுத்தது, செயலி தயாரித்தது, விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு தேவையான ஆதாரங்கள் உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பெண் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி, ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்தார். அந்தப் புகாரில், வெப் தொடர் எடுக்கப் போகிறேன் எனக் கூறி ஏராளமான பெண்களை நடிக்க அழைத்து, அவர்களை படிப்படியாக ஆபாச படங்களில் நடிக்க ராஜ் குந்த்ரா கட்டாயப்படுத்தியது தெரியவந்தது. இந்தப் புகாரை அடுத்து, சமீபத்தில் மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள மாலத், மாத் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் செக்ஸ் படங்கள் எடுக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, அங்கு ரெய்டு சென்ற போலீசார் 5 பேரைக் கைது செய்தனர். இந்த ரெய்டில் இயக்குநர் ரோவா கான், புகைப்படக் கலைஞர் மோனு சர்மா, இயக்குநர் பிரதிபா நலாவாடே, இரு நடிகர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.