பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

மிஸ் வேர்ல்டு 2000 அழகியும், பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸ் என்பவரை 2018ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பிரியங்கா அவரைப் பற்றிய அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வெளியிட்டு வருவார்.
ஜுலை 18ல் பிறந்தவரான பிரியங்கா, இரண்டு தினங்களுக்கு முன்பு தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றிய புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். இது ஒரு 'டெஸ்டினேஷன் பிறந்தநாள் கொண்டாட்டம்'.
'டெஸ்டினேஷன் திருமணம்' போல பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் 'டெஸ்டினேஷன்' வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். பிரியங்கா, தன்னுடைய பிறந்தநாளை 'நீச்சல் குள டெஸ்டினேஷன்' ஆகக் கொண்டாடியிருக்கிறார்.
சில பல நீச்சல் உடை புகைப்டங்களைப் பகிர்ந்து, தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மனைவி பிறந்தநாளுக்காக கணவர் நிக் ஜோனஸ் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார். ஆனால், அந்தக் கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லையாம். அவரது நண்பர்கள் மட்டுமே சிலர் கலந்து கொண்டார்களாம்.
இருப்பினும் கணவர் ஜோனஸ் மூன்று வருடங்களுக்கு முன்பு அவரது காதலை தன்னிடம் முதலில் சொன்ன தினமான ஜுலை 19ம் தேதியைக் கொண்டாடும் விதத்தில் நேற்று கணவருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, “என்னுடைய எல்லாம்... இன்றுடன் 3 வருடங்கள். ஒரு சிமிட்டல் போலத் தெரிந்தது, இப்போது வாழ்நாளாக இருக்கிறது. ஐ லவ் யூ” எனக் குறிப்பிட்டுள்ளார்.