மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. “எம்எஸ் தோனி, கபீர் சிங், குட் நியூஸ், லட்சுமி' உள்ளிட்ட ஹிந்திப் படங்களிலும், 'பரத் அனி நேனு, வினய விதேய ராமா' தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில், 'ஷெர்ஷா, பூல்புலையா 2, ஜக் ஜக் ஜீயோ, மிஸ்டர் லீலி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஷங்கர் அடுத்து தெலுங்கில் இயக்க உள்ள ராம் சரண் படத்திலும், ஹிந்தியில் இயக்க உள்ள ரன்வீர் சிங் படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்று இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற பிகினி உடை புகைப்படம் ஒன்றை கியாரா வெளியிட்டார். அதற்குள்ளாக 19 லட்சம் வரை அப்படத்திற்கு லைக்குகள் கிடைத்துள்ளன. ஹிந்தி நடிகைகள் பலருக்கும் பிகினி ஆடை மீது அவ்வளவு காதல். அவ்வப்போது அந்த ஆடை அணிந்த புகைப்படங்களை அணிந்து லைக்குகளை குவித்து, ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, செய்திகளிலும் இடம் பெற்றுவிடுகிறார்கள்.
மற்ற ஆடைகளை அணியும் போது உடலின் மொத்த அழகும் வெளிப்படுவதில்லை. ஆனால், பிகினி அணியும் போதுதான் உண்மையான உடலழகு வெளிப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதற்காக இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறார்களோ ?.