எனக்கு வயசே ஆகாது: சரத்குமார் | விதி எப்போதும் மாறாது: ஜெயம் ரவி | ஒரு நேர்மையாளனின் கதை - மனம் திறந்த நந்தா பெரியசாமி | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “ஒருதலை ராகம்” | 2024 - முத்திரை பதித்த முத்துக்கள்... | தாயைக் காத்த தனயன், உரியடி, பைரவா - ஞாயிறு திரைப்படங்கள் | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணையும் பிரியங்கா சோப்ரா | பாலிவுட்டில் கால் பதிக்கும் அமரன் பட இயக்குனர் | ரசிகர்களைக் திருப்திப்படுத்த மோகன்லால் எடுத்த அதிரடி முடிவு | சார்பட்டா பரம்பரை 2 அப்டேட் தந்த ஆர்யா |
பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது மனைவி கிரண்ராவை விவாகரத்து செய்யப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 1986ம் ஆண்டு ரீனா தத்தாவை திருமணம் செய்த ஆமீர்கான், 2002ல் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு 2005ம் அண்டு கிரண் ராவை திருமணம் செய்து கொண்டவர் தற்போது அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இது பாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நாங்கள் ஏன் விவாகரத்து செய்கிறோம் என்பது குறித்து ஆமீர்கானும், அவரது மனைவி கிரண்ராவும் இணைந்து விளக்கம் அளித்துள்ளனர். பாலிவுட் மீடியா ஒன்றுக்கு ஜூம் மீட்டிங் மூலம் அவர்கள் விளக்கம் அளித்தபோது இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்தபடி, கைகளை இறுக பற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த வீடியோவில் ஆமீர்கான் பேசியிருப்பதாவது: எங்களின் இந்த திடீர் விவாகரத்து முடிவு ரசிகர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், நாங்கள் இருவரும் இந்த முடிவால் ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளோம். கணவன் - மனைவி என்கிற உறவை மட்டுமே நாங்கள் இழக்கிறோம். மகன் ஆசாத்துக்காக இருவரும் ஒரே குடும்பமாக எப்போதுமே நட்பு பாராட்டி வாழ்வோம்.
நாங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்த கடந்த 15 ஆண்டுகளும் எங்களுக்கு பொன்னான ஆண்டாகவே இருந்தது. வாழ்க்கையை நிறைய சந்தோஷ தருணங்களுடன் வாழ்ந்து முடித்து விட்டோம். இனி இருவரும் சுதந்திர பறவையாக பறக்க ஆசைப்படுகிறோம். ரசிகர்கள் எங்கள் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். இதனை ஒரு முடிவாக பார்க்காதீர்கள். இது ஒரு புதிய தொடக்கத்தின் ஆரம்பமாக பாருங்கள். என இருவரும் அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.