மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

'தலைவி' படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஹிந்தி நடிகையான கங்கனா ரணவத். நான்கு முறை தேசிய விருதுகளை வென்றுள்ள கங்கனா, தன்னுடைய நடிப்புத் திறமையை பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் ஏற்கெனவே நிரூபித்துள்ளார்.
'தலைவி' படத்திற்குப் பிறகு 'தாகட், தேஜஸ்' என இரண்டு ஹிந்திப் படங்களில் நடிக்க உள்ளார். இவற்றோடு 'சீதா' படத்தில் நடிக்கவும் கங்கனாவை பரிந்துரை செய்துள்ளார் அப்படத்திற்குக் கதை எழுதி வரும் ராஜேந்திர பிரசாத்.
கங்கனா இதற்கு முன் நடித்த 'மணிகர்ணிகா, தலைவி' ஆகிய படங்களுக்கும் கதை உருவாக்கம் செய்தவர் இயக்குனர் ராஜமவுலியின் அப்பா ராஜேந்திர பிரசாத்.
'சீதா' கதாபாத்திரத்தில் நடிக்க கரீனா கபூர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக சில நாட்களுக்கு முன்பு ஒரு பரபரப்பு நிலவியது. ஆனால், கரீனாவை அக்கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க யாருமே அணுகவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது.
இந்நிலையில் 'சீதா' கதாபாத்திரத்தில் நடிக்க கங்கனாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா, அப்படி கிடைத்தால் அவர் ஏற்று நடிப்பாரா, என பாலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.