அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பிறகு ஆரம்பம், காஞ்சனா-2, கேம் ஓவர் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
ஹிந்தியில் பிங்க், பத்லா, நாம் சபானா, மிஷன் மங்கள், தப்பட் போன்ற படங்களில் நடித்து பிசியாகிவிட்டார். டாப்சியின் நடிப்பு ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. இதையடுத்து அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் 'டூ-பாரா', 'லூப் லாபெட்டா', மற்றும் 'சபாஷ் மித்து' உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கங்கணா ரனாவத் வரிசையில் டாப்சியும் இடம் பிடித்துவிட்டார். இவர்கள் அனைவருமே, நாயகி முக்கியத்துவம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அசத்தியும் வருகிறார்கள். இதுவரை குறைவான சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த டாப்சி, படங்கள் குவிவதால் தனது சம்பளத்தை உயர்த்தியிருக்கிறாராம்.