ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

பாலிவுட் சினிமாவை பொருத்தவரை, அதன் வியாபார எல்லை மிகப்பெரியது என்பதால், அங்கே வளர்ந்து வரும் இளம் நடிகர் நடிகைகள் கூட, கோடிகளில் சம்பளம் வாங்குவது ஆச்சரியமான விஷயமே அல்ல.. ஆனால் அப்படி கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் முன்னணி நட்சத்திரங்களில் பலர் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்கள் என்றால், நம்பமுடிகிறதா.? ஆனால் அதுதான் உண்மை. இவர்கள் கொடுக்கும் ஒருமாத வாடகையில் நம் ஊர் கிராமங்களில் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு கட்டிக்கொள்ளலாம். அப்படி வாடகை வீட்டில் வசிக்கும் சில நட்சத்திரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்
கடந்த 15 வருடங்களாக இந்தி திரையுலகில் மிக முக்கியமான இடத்தில் இருந்து வருபவர் நடிகை கத்ரீனா கைப். இவர் தற்போது 15 லட்சம் ரூபாய் மாத வாடகையில் கடலை பார்த்தபடி உள்ள அபார்ட்மென்ட்டில் உள்ள பிளாட் ஒன்றில் வசித்து வருகிறார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், கடந்த வருடத்தில் இருந்து, மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் உள்ள அபார்ட்மென்ட்டில் 8.25 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து குடியிருந்து வருகிறார்
பாலிவுட்டில் இன்னொரு முன்னணி நடிகையான ஜாக்குலின் பெர்னாண்டஸ் 5 பெட்ரூம் கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றில், 6.78 லட்சம் வாடகை கொடுத்து குடியிருந்து வருகிறார். அதேபோல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், வாடகைக்கு வீடு தேடி, கிடைக்காமல் ரொம்பவே சிரமப்பட்டார் அந்த சமயத்தில் அவருக்கு கைகொடுக்கும் விதமாக நடிகை செலினா ஜெட்லி, தனக்கு சொந்தமான மூன்று படுக்கையறை கொண்ட அபார்ட்மென்ட்டை சன்னிலியோனுக்கு வாடகைக்கு கொடுத்தார். இருந்தாலும் தற்போது சன்னி லியோன் அபார்ட்மெண்ட் ஒன்றில் 12வது மாடியில் 4000 சதுர அடி கொண்ட பிளாட் ஒன்றை வாங்கி விட்டாராம்.