பாலிவுட்டின் பிரிமியர் பட நிறுவனமான யஷ்ராஜ் பிலிம்ஸ் தூம் 4 படத்தில் பிரபாஸை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டிருந்தது. ஆனால் அந்த திட்டத்தை கைவிடப்பட்டதாக ஒரு செய்தி பரவி வந்தது, ஆனால் யஷ்ராஜ் பிலிம்ஸ் ஆதித்ய சோப்ரா அதை மறுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தற்போது பிரபாஸ் பல பான்-இந்தியா படங்களில் நடித்து வருகிறார். ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், சலார் ஆகிய படங்களில் நடித்து வருபவர் அடுத்தபடியாக நாக் அஸ்வின் இயக்கும் சயின்ஸ் திரில்லர் படத்தில் நடிப்பதற்கும் கால்சீட் கொடுத்திருக்கிறார். இந்த படங்கள் முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் கூட ஆகலாம். அதனால் இந்த படங்களை பிரபாஸ் முடித்த பிறகு தூம்-4 படத்தை தொடங்கலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும், தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.