கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் |
சர்ச்சைக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரணவத், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையும் சர்ச்சை ஆக்கினார். கடந்த 8ம் தேதி அன்று தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது குறித்து கங்கனா தனது இன்ஸ்ட்ராகிராமில் "எனக்கும் கொரோனா வந்துவிட்டது. இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. ஊடகங்கள் மக்களை பயமுறுத்தி வருகிறது" குறிப்பிட்டிருந்தார்.
கொடூரமான கொரோனா தொற்றை காய்ச்சல் என்று குறிபிட்டதால் இன்ஸ்ட்ராகிராம் நிறுவன விதிமுறைகளின்படி இந்த பதிவை இன்ஸ்ட்ராகிராம் நீக்கியது.
தற்போது கங்கனா கொரோனாவில் மீண்டு விட்டதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: எனக்கு கோவிட் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்தது. இந்தக் கிருமியை நான் எப்படித் தோற்கடித்தேன் என்று சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன. ஆனால், கோவிட் ரசிகர் மன்றங்களைப் புண்படுத்த வேண்டாம் என்று என்னிடம் சொல்லப்பட்டுள்ளது. ஆம், இந்தத் தொற்றை அவமதித்தால் அதனால் புண்படுபவர்களும் இங்கே இருக்கின்றனர். எது எப்படியோ, உங்கள் அன்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி" என்று எழுதியுள்ளார்.