ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் | கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! |
பல சர்வதேச கார்பரேட் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் அடுத்ததாக உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக அமேசானும் இந்திய படத் தயாரிப்பில் நேரடியாக இறங்கி உள்ளது.
அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக தற்போது அமேசன் இணைந்துள்ளது. இந்த படத்தை அபிஷேக் சர்மா இயக்குகிறார். ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நசரத் பருச்சா ஆகியயோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இது குறித்து அமேசான் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்திய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகின்ற ஒரு திரைப்படத்தில் இணை தயாரிப்பாளராக அறிமுகம் ஆவதன் மூலம் முன்னேற்றப் பாதையில் மேலும் ஒரு படி எடுத்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய முயற்சி இந்தியாவுடனான எங்கள் உறவை மேலும் வலுப்படுத்தும். சீரிய திறன் கொண்ட நடிகர்கள் மற்றும் வரலாற்றில் தனித்துவம் கொண்ட ஒரு கதையுடன், உலகெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களை தொடர்ந்து மகிழ்விப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்'' என தெரிவித்துள்ளது.