10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

'உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பெயர்களை அறிவிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது' என ஆஸ்திரேலிய நிருபர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோரின் பெயர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும் பிரபல பாப் நடிகருமான நிக் ஜோனஸ் ஆகியோர் இந்த பெயர்களை அறிவித்தனர்.
'இவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை வெளியிடும் அளவுக்கு திரையுலகுக்கு இவர்கள் என்ன பங்களிப்பு அளித்துள்ளனர்' என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு 'இதோ நீங்கள் கேட்ட தகுதி. கடந்த 20 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்துள்ளேன். அதைத் தவிர ஹாலிவுட்டிலும் நடித்துள்ளேன். அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பே வாட்ச்' என்ற 'டிவி' தொடரிலும் நடித்துள்ளேன்; இது போதுமா' என பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார். இதையடுத்து நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் தன் தனிப்பட்ட விபர குறிப்புகளை மறைத்துள்ளார். தகுந்த பதில் அளித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.