''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் தற்போது பயோபிக் படங்களில் ஆர்வம் காட்டுகிறார். ஏற்கெனவே ராணி லட்சுமிபாய் பயோபிக்கான மணிகர்னிகாவில் நடித்தார். தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கில் நடித்து வருகிறார். அடுத்து முன்னாள் பிரதமர் இந்திராவின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து இருந்தார். டிட்டாவின் கதை என்னிடம் உள்ளது. அந்த கதையை தெரிந்து கொண்டு அதை கங்கனா சினமாவாக்க முயற்சிப்பதாக பிரபல இந்தி எழுத்தாளர் ஆஷிக் கவுல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கங்கனா மீது கதை திருட்டு வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் காஷ்மீரின் போர் வீராங்கனை டிட்டா என்ற புத்தகத்தை எழுதி உள்ளேன். அதை படமாக்குவதற்காக கங்கனாவை பல தடவை அணுகினேன். கதையின் சில பகுதிகளை அவருக்கு மின் அஞ்சலிலும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் எனக்கு தெரியாமல் இந்த கதையை திருடி சினிமாவாக தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். என்கிறார்.