'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்திய சினிமா வரலாற்றில் வேறு எந்தப் படமும் சந்தித்திராத எதிர்ப்புகளையும், போராட்டங்களையும், வழக்குகளையும், தடைகளையும் சந்தித்து அனைத்தையும் வென்று வெளிவந்திருக்கிறது பத்மாவத் திரைப்படம். பத்மாவத் படத்தை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டது. அவை எல்லாவற்றிலும் பத்மாவத்துக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி இருக்கிறது.
கடைசியாக படம் வெளிவந்து விட்ட நிலையிலும் அதில் இடம்பெற்றிருக்கும் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று டில்லி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி மிஸ்ரா அடங்கிய பென்ஞ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் "பத்மாவத் திரைப்படத்தை தணிக்கை குழு நன்றாக ஆராய்ந்து சில காட்சிகளை நீக்கி, சில மாறுதல்களை செய்து சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தை வெளியிடவும் அனுமதி அளித்துள்ளது. அதன் பிறகும் காட்சிகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. படத்தை திரையிடுவதை தடுக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.