விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன், சாஹித் கபூர், ரன்வீர் சிங் நடித்த 'பத்மாவத்' திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியானது.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கூறியதைப்போல் படத்தில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் என்பது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் இந்த படம் மிகப்பெரிய வசூலைக் குவித்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. ஆனாலும் சில மாநிலங்களில் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு இங்கு மட்டுமல்ல, மலேஷியாவிலும் தான். மலேஷியாவில் வெளியிடுவதற்கான முயற்சியாக 'பத்மாவத்' படத்தை மலேஷியாவில் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தைப் பார்த்த மலேஷியா சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை மலேஷியாவில் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளது.
இதனால் மலேசியாவில் 'பத்மாவத்' திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.