அந்த 7 நாட்கள் படத்தில் மந்திரியாக நடிக்கிறார் கே.பாக்யராஜ் | ராம் சரண் படத்தில் நடிக்க மறுத்த சுவாசிகா | ஜனநாயகன் படத்தில் விஜய்யின் அபிமான இயக்குனர்கள் | என் செல்லம் சிவகார்த்திகேயன் : அனிருத் | பிளாஷ்பேக் : புராண படத்தில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக் : தெலுங்கு சினிமாவின் முதல் காமெடி நடிகர் | வெப் தொடரில் வில்லி ஆனார் தர்ஷனா | அக்ஷய் குமாரின் ஹிந்தி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் | மதுரை மண்ணின் மைந்தன்... ‛சொக்கத்தங்கம்' விஜயகாந்த் பிறந்ததினம் இன்று | ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் கல்யாணி பிரியதர்ஷினின் 2 படங்கள் |
பிரபுதேவா இயக்கத்திலான "சிங் இஸ் பிலிங்" படத்திற்கான குதிரையேற்ற பயிற்சியின் போது அசத்திய எமி ஜாக்சனை கண்டு படக்குழுவினரே வியப்பில் ஆழ்ந்தனர். சிங் இஸ் பிலிங் படத்தில், எமி ஜாக்சனின் துவக்க காட்சியில், அவர் குதிரையேற்ற வீரராக நடிக்க உள்ளார். இதற்காக, குதிரையேற்ற பயிற்சி பெறுமாறு எமி ஜாக்சனுக்கு, பிரபுதேவா அறிவுறுத்தியிருந்தார். எமி ஜாக்சனின் தாய், லிவர்பூல் உள்ளிட்ட பல்வேறு ரோமானிய குதிரையேற்ற பயிற்சி மையங்களில் பயிற்றுநராக பணியாற்றியுள்ளதால், எமி ஜாக்சன சிறு வயதிலேயே, குதிரையேற்ற பயிற்சி பெற்றிருந்தார். இதன்காரணமாகவே, குதிரையேற்ற பயிற்சியை விரைவில் பெற்று தன்னால் சோபிக்க முடிந்ததாக, எமி ஜாக்சன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா இயக்கத்திலான இப்படத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கே கே மேனன், லாரா தத்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.