விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
பாலிவுட் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமான ஆலியா பட் '2 ஸ்டேட்ஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அதிகம் பேசப்படும் ஹீரோயின்களில் ஒருவராகி விட்டார். இதுவரை நான்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் முத்தக் காட்சிகளில் நடிப்பதில் குறுகிய காலத்தில் பெரிய புகழைப் பெற்று விட்டார். நடிகைகளில் இவர் என்றால், நடிகர்களில் இவரது உறவினரான இம்ரான் ஹஷ்மி, முத்தக் காட்சிகளில் நடிப்பதில் புகழ் பெற்றவர்.
முத்தக் காட்சியில் நடிப்பது இயந்திரத்தனமானது என்கிறார் ஆலியா பட். “ஒரு முத்தம் கட்டிப் பிடிப்பது போன்று காதலை வெளிப்படுத்தும் ஒரு விஷயமே. ஆனால், சினிமாவில் முத்தக் காட்சியில் நடிப்பது எந்த விதமான காதலுடன் கொடுப்பது அல்ல. அது ஒரு இயந்திரத்தமான விஷயம். எனக்கு இப்போது யாருடனும் காதல் இல்லை. அப்படி ஏதாவது இருந்தாலும், அதைப் பற்றி நான் பேச மாட்டேன். ஏனென்றால் அப்படி ஏதாவது ஒன்று இருந்தால் அதைப் பற்றியே பேச ஆரம்பிப்பார்கள். அந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்க விரும்புகிறேன். எதைப் பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசுவேன். ஒருவருடன் காதல் கொள்வது என்பது அனைவரது வாழ்க்கையிலும் வரும், ஆனால், எங்களது வாழ்க்கைப் பற்றி தெரிந்து கொள்வதிலேயே மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்,” என்று ஆதங்கப்படுகிறார் ஆலியா பட்.
ஹிந்தித் திரையுலகின் மிகப் பெரிய நட்சத்திரக் குடும்பமாக விளங்கும் 'பட்' குடும்பத்தில் முத்தக் காட்சிகளுக்குப் புகழ் பெற்றவர்களாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த 'இம்ரான் ஹஷ்மி, ஆலியா பட்' இருக்கிறார்கள் என பாலிவுட் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.