Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தமன்னாவை அலற வைத்த ஸ்ருதிஹாசன்!

28 ஜூலை, 2013 - 11:13 IST
எழுத்தின் அளவு:

லக் இந்தி படத்தில் அறிமுகமானவர்தான் ஸ்ருதிஹாசன். ஆனால் அந்த படம் தோல்வியடைந்ததால் அதன்பிறகு பாலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை. அதன்காரணமாகத்தான், தமிழ், தெலுங்கு என தெற்கு நோக்கி வந்தார். இருப்பினும் பாலிவுட் சினிமாவை கலக்க வேண்டும் என்பதே ஸ்ருதியின் நோக்கமாக இருந்ததால் டிடே படத்தில் விலைமாது வேடம் என்றபோதும் துணிச்சலாக ஏற்றார்.

அதில் அவர் நடித்து வெளியான காமக்கொடூர போட்டோக்கள் பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் அதிர வைத்தது. அதன்காரணமாக, இந்தியில் மளமளவென்று சில புதிய படங்கள் ஸ்ருதிக்கு புக்காகி உள்ளன. அதில் தமிழில் வெளியான ரமணா படத்தில் இந்தி ரீமேக்கும் ஒன்று. இந்த படத்தில் தமன்னாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரை விட இவர் பெட்டரான நடிகை என்று படத்தின் நாயகனாக அக்ஷய்குமாரே ஸ்ருதி பெயரை முன் வைத்ததால், உடனே அவரை ஒப்பந்தம் செய்தனர்.

இதனால் டென்சனான தமன்னா, தனது வாய்ப்பை தட்டிப்பறித்து விட்டதாக ஸ்ருதியை வசைபாடிக்கொண்டு திரிந்தாராம். ஆனால், இந்த சேதி ஸ்ருதியின் காதுகளுககு செல்ல, அவருக்கு ஒருநாள் போன் போட்டு லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம். இதனால் மிரண்டு போன தமன்னா, இப்போது யாராவது ஸ்ருதியின் பெயரைச்சொன்னாலே அலறிக்கொண்டு ஓடுகிறாராம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)