Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர்

18 பிப், 2026 - 01:44 IST
எழுத்தின் அளவு:
To-Deewane-Sehar-Mein-talks-about-love,-dreams-and-human-connections-Mrunal-Thakur
Advertisement

பாலிவுட்டில் ரவி உதய்வர் இயக்கத்தில் சித்தாந்த் சதுர்வேதி, மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'தோ தீவானே சேஹர் மெய்ன்'. காதல் கதையில் தயாராகி உள்ள இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரித்துள்ளார். நாளை மறுநாள் பிப்., 20ல் படம் ரிலீஸாகிறது. இதில் பணிபுரிந்த அனுபவம், அவரது வேடம், படம் பற்றிய பல்வேறு விஷயங்களை மிருணாள் பகிர்ந்துள்ளார்.

'தோ தீவானே சேஹர் மெய்ன்' ரிலீஸாகிறது, உங்க மனநிலை எப்படியிருக்கிறது?

மிகவும் மகிழ்ச்சியாகவும் அதேசமயம் கொஞ்சம் பதட்டமாகவும் இருக்கிறேன். ஒவ்வொரு படமுமே எனக்கு சிறப்பானது. இது என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. ஒரு அழகான காதல் கதையை சொல்கிறோம். ரசிகர்கள் இந்த படத்தை காண அவர்களுடன் சேர்ந்து நானும் ஆர்வமாய் உள்ளேன்.

படத்தில் உங்க ரோல் பற்றி சொல்லுங்க...?
ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நிறைய உணர்ச்சிகள், கனவுகள் மற்றும் உறவுகளுடன் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளவளாக வருகிறேன். காதல், மோதல் மற்றும் சுயசார்பு தருணங்களை கடந்து செல்பவளாக நடித்துள்ளேன். இது வெறும் காதல் பயணம் மட்டுமல்ல, அவளது வளர்ச்சி, தேர்வுகள் மற்றும் தன்னைப் புரிந்து கொள்வது பற்றியது. கொஞ்சம் சவாலான வேடம் தான் ஆனால் நிறைவானது.

இந்த படத்தில் உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

அற்புதமான பயணமாக இருந்தது. மொத்த படக்குழுவும் ஆதரவான சூழலை உருவாக்கி தந்தனர். ஜாலியாக வேலை செய்தேன். இயக்குனரின் தொலைநோக்குப் பார்வையிலிருந்து சக நடிகர்களின் அர்ப்பணிப்பு வரை அனைத்தும் அழகாக ஒன்றிணைந்தன. நீண்டநாட்கள் படப்பிடிப்பில் இருந்தேன். பல மறக்க முடியாத தருணங்களும் இருந்தன.

இந்த படத்திலிருந்து பார்வையாளர்கள் எதை எடுத்துக்கொள்வார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்?
கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள உணர்ச்சிகள் மற்றும் உறவுகளுடன் அவர்கள் இணைவார்கள் என்று நம்புகிறேன். இது காதல், கனவுகள் மற்றும் மனித தொடர்புகளைப் பற்றிய படம். அனைவரும் தொடர்புபடுத்தக்கூடிய ஒன்று. பார்வையாளர்கள் அர்த்தமுள்ள ஒன்றை உணர்ந்து வெளியேறினால், நாங்கள் எங்கள் வேலையை சரியாக செய்துள்ளோம் என்று அர்த்தம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட்விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக ... 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap