சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
பாலிவுட்டில் முன்னணி கான் நடிகர்களில் ஒருவர் அமீர்கான். மற்ற இருவரை போல ஆக்ஷன் கமர்சியல் படங்கள் பக்கம் போகாமல் தொடர்ந்து கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெளியாகி உள்ளது. இது குறித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில கலந்து கொண்டார் அமீர்கான். அந்த வகையில் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கலந்துரையாடினார் அமீர்கான். அப்போது அவர் மனம் திறந்து பல விஷயங்களை கூறினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “என் முதல் மனைவி ரீனா தத்தா என்னை விட்டு பிரிவதாக கூறி வெளியேறிய அன்று ஒரு பாட்டில் மது அருந்தினேன். அதன்பிறகு வந்த ஒன்றரை வருடங்களில் தினசரி குடித்தேன். என்னால் தூங்கவே முடியவில்லை. அதிக மது குடித்ததால் சுயநினைவை இழந்தேன். என்னை நானே உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்தேன்” என்றும் மனம் திறந்து கூறியுள்ளார்.
அவரது முதல் மனைவி ரீனா தத்தாவுடனான வாழ்க்கை பதினாறு வருடங்களுக்கு பிறகு விவாகரத்தில் முடிந்தது. அதைத் தொடர்ந்து 2005ல் கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அமீர்கான். அவரையும் கிட்டத்தட்ட 16 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2021ல் விவாகரத்து செய்தார் அமீர்கான். தற்போது தனது நீண்டநாள் தோழியான கவுரி ஷிண்டேவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகிறார் அமீர்கான்.. ஆனாலும் தனது முதல் இரண்டு மனைவிகளுடனும் இணக்கமான உறவை பேணி வருகிறார் அமீர்கான்.