ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் | மோகன்லால் மம்முட்டி பட டைட்டிலை தவறிப்போய் வெளியிட்ட இலங்கை சுற்றுலாத்துறை | 'குபேரா' தமிழ், தெலுங்கில் தான் படமாக்கினோம் : இயக்குனர் சேகர் கம்முலா தகவல் | மணிரத்னம் பட வாய்ப்பு கைநழுவி போனது இப்படித்தான்: மலையாள நடிகர் விரக்தி | தக் லைப் : கர்நாடகாவில் அடுத்த வாரம் ரிலீஸ் | விமர்சனத்திற்கு பணம் கேட்பதா ? கேரளாவிலும் இயக்குனர் கிளப்பிய சர்ச்சை.. போலீஸிலும் புகார் | மம்முட்டியை தொடர்ந்து தனது வீட்டையும் சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விட்ட மோகன்லால் | திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா |
கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்து டாக்ஸிக், ராமாயணா என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் யஷ். இதில் டாக்ஸிக் படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இதில் யஷ் உடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூயுமா குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கன்னடம், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வெங்கட் நாராயணாவுடன் இணைந்து யஷ் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவலை அவர் வெளியிட்டதை அடுத்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க பெங்களூருக்கு அலைய வைக்க வேண்டாம் என்று டாக்ஸிக் படப்பிடிப்பையே மும்பைக்கு மாற்றுமாறு கூறியிருக்கிறார் யஷ். இதனால் டாக்ஸிக் படத்தில் கியாரா அத்வானி நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் மும்பையிலேயே படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்கள். இதேப்போல் ஹிந்தியில் தயாராகும் ராமாயணா என்ற படத்தில் ராவணனாக நடிக்கும் யஷ், அந்த படத்திலும் இணை தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார்.