அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பாலிவுட்டின் சீனியர் ஹீரோவான அமிதாப்பச்சனுக்கு மும்பையின் முக்கிய இடங்களில் சில வீடுகள் உள்ளன. அவற்றில் மும்பையின் ஓஷிவரா பகுதியில் அமைந்துள்ள 'டூப்ளக்ஸ் அபார்ட்மென்ட்' ஒன்றை 83 கோடிக்கு விற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2021ம் ஆண்டில் 31 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த இடம், தற்போது அது இத்தனை மடங்கு விலை உயர்ந்து விற்கப்பட்டுள்ளது. விசாலாமான மாடி மற்றும் ஆறு கார் பார்க்கிங் கொண்ட இடம் சமீபத்தில் வேறொருவரால் வாங்கப்பட்டு டாகுமென்ட் வேலைகளும் முடிந்துள்ளதாம். 5795 பில்ட்அப் ஏரியா, 5185 கார்ப்பெட் ஏரியாவுடன், 4800 சதுரஅடி மாடி என அமைந்த வீடு, தி அட்லான்டிஸ் என்ற குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ளது.
பாலிவுட் பிரபலங்கள் பலரும் வீடுகளை வாங்குவதையும், பின்னர் விற்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.