ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் 23வது படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை அடுத்து ஹிந்தியில் சல்மான்கான் நடிப்பில் ‛சிக்கந்தர்' என்ற படத்தை இயக்கப் போகிறார். தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தமாகி வருகிறார்கள்.
மேலும் இரண்டு ஹீரோயின்கள் இடம்பெறும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே கமிட்டாகி விட்ட நிலையில், தற்போது பாலிவுட் நடிகை கரீனா கபூர் இன்னொரு நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே சல்மான்கானுடன் ‛தபாங்-2' உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ஓரிரு தமிழ் நடிகர் நடிகைகளும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது இப்படத்தை அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.