எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா | பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி |
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் கன்னட சினிமாவில் நடித்துள்ளார். இதற்கு முன் இரண்டு கன்னட படங்களில் நடித்துள்ள இவர் இப்போது ‛கேடி - தி டெவில்' என்ற படத்தில் நடித்துள்ளார். துருவா சார்ஜா ஹீரோவாக நடிக்கும் இதில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார். சத்யவதி எனும் முக்கிய வேடத்தில் ஷில்பா ஷெட்டி நடித்துள்ளார்.
1970களின் பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பீரியட் ஆக்ஷன் படமாக இது தயாராகிறது. பிரேம் இயக்கும் இந்த படத்தில் ரேஷ்மா நானையா, நோரா பதேகி ஆகியோரும் நடித்துள்ளனர். மைசூரில் நடந்த படப்பிடிப்போடு தனக்கான படப்பிடிப்பை ஷில்பா முடித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டியை ஒரு பவர்ஹவுஸ் என்று பெருமையாக குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரேம். அதோடு, "போர் என்பது ராஜ்ஜியங்களுக்கு இடையே உள்ளது. ஒரு ராஜ்ஜியத்திற்கு சக்தி வாய்ந்த சத்யவதி தேவை" என்று பாராட்டி இருக்கிறார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.