
விபத்தை ஏற்படுத்தியதாக நடிகை ரவீணா மீது தாக்குதல்
காரை ஓட்டிய டிரைவர் காரில் இருந்து இறங்கி வந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். மேலும் அவர், அவர்களை பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீணா டாண்டனும், டிரைவருடன் சேர்ந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ளூர் மக்கள் திரண்டனர். இந்த சம்பவத்தை, அவர்களில் சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். கோபத்தில், உள்ளூர் மக்கள் சிலர் நடிகை ரவீணாவை தாக்கினர்.
உடனே, "தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்; என்னை தள்ளாதீர்கள்" என, அவர் கெஞ்சினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!