ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படமும், பாலிவுட்டின் பிரபல இயக்குனரான ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்த டங்கி திரைப்படமும் வெளியானது. ஒரு பக்கம் சலார் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ஏற்கனவே இரண்டு ஹிட் படங்களை கொடுத்த ஷாரூக்கானின் டங்கி படத்திற்கும் அதற்கு குறையாத எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது.
அதே சமயம் இந்த படங்களின் வெளியீட்டின் போது தியேட்டர்களை பங்கிடுவதில் கூட பல இடங்களில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில் சலார் படம் வெற்றி பெற்று தற்போது 600 கோடியை தாண்டி வசூலித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதே சமயம் ஷாரூக்கானின் டங்கி திரைப்படம் தற்போது தான் 400 கோடியை தொட்டுள்ளது. இந்த நிலையில் டங்கி படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணியிடம் இரண்டு படங்களும் ஒரே சமயத்தில் வெளியானதால் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குபதிலளித்த ஹிராணி, “நிச்சயமாக வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இப்படி இரண்டு பெரிய படங்கள் ஒன்றாக வெளியாகாமல் தவிர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளும் குறைவாகவே இருந்தன. மேலும் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாவதால் இப்படிப்பட்ட மோதல் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாதது.
இந்த சூழ்நிலையில் இரண்டு படங்களையும் பார்க்கலாம் என நினைப்பவர்கள் ஏதோ ஒரு படத்திற்காக மட்டுமே செலவு செய்ய முன்வருவார்கள். குறிப்பாக மாதத்திற்கு ஒரு படம் பார்க்கலாம் என நினைத்திருப்பவர்கள் இதில் ஏதோ ஒன்றைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இந்த இரண்டு படங்களின் வசூலுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்” என்று கூறியுள்ளார்.