ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
சிலவருடங்களுக்கு முன் சர்ச்சைகளில் சிக்கி சரிந்து கிடந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கினார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2வது பாகமாக லஹே ரகோ முன்னாபாய் படத்தை இயக்கினார் ராஜ்குமார் ஹிரானி. இந்தப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இதையடுத்து கடந்த 15 வருடங்களாக முன்னாபாய் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது உருவாகும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்தநிலையில் ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டங்கி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் புரமோஷனுக்காக ராஜ்குமார் ஹிரானி செல்லும் இடங்களில் எல்லாம் முன்னாபாய் எம்பிபிஎஸ் படத்தின் மூன்றாம் பாகம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி கூறும்போது, “சஞ்சய் தத்தும் நானும் இது பற்றி பேசினோம். மூன்றாம் பாகத்தை உருவாக்குங்கள் என சஞ்சய் தத் கேட்டுக்கொண்டார். டங்கி இப்போது தான் வெளியாகி இருக்கிறது. இனிமேல் தான் இந்த மூன்றாம் பாகத்தை பற்றி யோசிக்க வேண்டும். இந்த மூன்றாம் பாகம் உருவாக்குவதில் இருக்கும் மிகப்பெரிய கஷ்டமே ஏற்கனவே இதன் முந்தைய இரண்டு பாகங்களும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதுதான்.
இந்த மூன்றாம் பாகத்திற்காக இதுவரை ஐந்து கதைகள் எழுதி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. காரணம் பல கதைகள் மிகவும் பழைய பாணியில் இருந்தது தான். ஒருவேளை முதல் இரண்டு படங்களையும் சமன் செய்யும் விதமாக கதை உருவாகாவிட்டால் மூன்றாம் பாகத்தை நான் இயக்குவது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். தற்போதும் இதற்கான ஒரு கதை என்னிடம் இருக்கிறது. மற்றபடி காலம் தான் பதில் சொல்ல வேண்டும்” என்று கூறியுள்ளார்.