அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பிரபல பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கானின் இரண்டு சகோதரர்களில் ஒருவரான நடிகர் அர்பாஸ் கான் நடிகை மலைக்கா அரோராவை திருமணம் செய்து கொண்டு கடந்த 2017ல் விவாகரத்து பெற்று பிரிந்தார். அவரது இன்னொரு சகோதரரான சோஹைல் கான் கடந்த வருடம் தான் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார். சல்மான் கானோ இன்னும் திருமணம் செய்யாமலேயே பேச்சுலராக சுற்றி வருகிறார். இந்த நிலையில் இவர்களது வீட்டில் சுப விசேஷம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆம்.. சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் திரைப்பட ஒப்பனை கலைஞரான சுரா கான் என்பவரை திரு(மறு)மணம் செய்து கொண்டுள்ளார். விரைவில் வெளியாக இருக்கும் 'பாட்னா சுக்லா' என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியபோது காதல் மலர்ந்து அது இப்போது திருமணத்தில் கை கூடி இருக்கிறது.
இந்த திருமண நிகழ்வில் சல்மான் கான் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் பாலிவுட் பிரபலங்களான ரவீனா டாண்டன், ஜெனிலியா, பரா கான் உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.