விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி உள்ள படம் அனிமல். பெண்களுக்கு எதிரான படம் என்ற விமர்சனங்கள் எழுந்த போதும் இந்த படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனை செய்து வருகிறது. மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 3.21 நிமிடங்கள் இருக்கும் நிலையில், அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் இந்த படத்தில் மேலும் ஒன்பது நிமிட காட்சிகளை இணைத்து வெளியிடப் போவதாக அறிவித்திருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா.
அவர் கூறுகையில், அனிமல் படம் வெளியானபோது, இரண்டு முக்கிய காட்சிகளின் டப்பிங் பணிகள் முடிவடையாததால் அந்த ஒன்பது நிமிட காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை வெளியிட்டோம் . ஆனால் அப்படி நீக்கப்பட்ட அந்த ஒன்பது நிமிட காட்சிகளை அடுத்து ஓடிடியில் வெளியாகும் போது இணைத்து 3:30 ரன்னிங் டைம் கொண்ட படமாக அனிமல் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அனிமல் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகிறது.