சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
புகழ்பெற்ற டைகர் படத்தின் 3ம் பாகம் நாளை தீபாவளியன்று வெளிவருகிறது. இந்த நிலையில் சல்மானும், கத்ரீனாவும் தீபாவளி கொண்டாடும் படத்தை வெளியிட்டு இது எங்களுக்கு தலை தீபாவளி என்று பெருமிதத்துடன் கூறியுள்ளனர். அதாவது சல்மான், கத்ரீனா இணைந்து நடித்த படம் முதன் முறையாக தீபாவளியன்று வெளிவருகிறதாம். அதைத்தான் அவர்கள் தலை தீபாவளி என்று குறிப்பிடுகிறார்கள்.
இதுகுறித்து சல்மான்கான் கூறியிருப்பதாவது: ஒரு தீபாவளி ரிலீஸை பெறுவது என்பது எனக்கு எப்போதுமே ஸ்பெஷலானது. காரணம் எப்போதுமே பண்டிகைகள் எனக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொடுத்து ஆசீர்வதித்துள்ள பல நினைவுகள் என்னிடம் இருக்கின்றன. நானும் கத்ரீனாவும் இணைந்த நடித்த படங்கள் எதுவும் இதுவரை தீபாவளியில் வெளியானதில்லை என்பது நிச்சயமாக ஆச்சர்யமான விஷயம் தான். அந்தவகையில் 'டைகர் 3' எங்களது முதல் தீபாவளி ரிலீஸாக இருக்கும். சக நடிகர்களாக நாங்கள் இருவருமே அதிக மக்களால் விரும்பப்படும் படங்களில் நடித்துள்ளோம். அதனால் 'டைகர் 3' மூலமாக அவர்களுக்கு சிறந்த தீபாவளியை கொடுக்க முடிந்தால் அதுவே எங்களுக்கு மிகுந்த பெருமையாக இருக்கும்” என்கிறார்.
கத்ரீனா கூறும்போது, “தீமைக்கு எதிராக பெறும் வெற்றியை குறித்து நான் நடித்துள்ள 'டைகர் 3' ரிலீசாகிறது என்பதால் இந்த தீபாவளி எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானது. மேலும் சல்மான் கானுடன் நான் இணைந்து நடித்து முதல்முறையாக தீபாவளியில் வெளியாகும் படமும் இதுதான். சல்மான் கானும் நானும் ஒவ்வொருவரையும் உற்சாக பொழுதுபோக்கு செய்வதற்காக காத்திருப்பதுடன் இந்த தீபாவளி பண்டிகையில் மகிழ்ச்சியையும் பரவசத்தையும் சேர்த்தே தர இருக்கிறோம்” என்கிறார்.
ஆதித்யா சோப்ரா தயாரிப்பில், மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள 'டைகர் 3' ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தீபாவளி ரிலீஸாக நாளை 12ம் தேதி ஞாயிறன்று வெளியாக இருக்கிறது.