'அமர்க்களம்' டிஜிட்டல் பார்த்து பிரமித்த இயக்குனர் சரண் | 100 மில்லியன் கடந்த சாய் அபயங்கரின் 'பவழ மல்லி' | பெரம்பூர் ரயில் தொழிற்சாலையில் படமான 'அன்பே டயானா ' | ஹீரோ, வில்லன்: இரண்டு வேடங்களில் நடிக்கும் ஜே.டி சக்கரவர்த்தி | பிளாஷ்பேக் : தமிழில் 'திராவிடன்' ஆன மலையாள 'ஆரியன்' | பிளாஷ்பேக் : தான் நடிக்க முடியாத படத்திற்கு உதவிய எம்ஜிஆர் | தமிழில் அறிமுகம் : பெண் பாடி பில்டர் ஆர்வம் | வரிசையாக ஏமாற்றம் கொடுத்த படங்கள் | தயாரிப்பாளர் ஆக நயன்தாரா ஜெயித்தாரா? | எனக்கு அவங்க செய்தாங்க, நான் பதிலுக்கு செய்கிறேன் : ஜி.வி.பிரகாஷ் |

தமிழில் ராஜா ராணி படத்தில் இயக்குனராக அறிமுகமான அட்லி, அதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று படங்களை இயக்கினார். அதன் பிறகு ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கினார். இந்த படம் 1125 கோடி ரூபாய் வசூலித்து இந்திய அளவில் சாதனை செய்திருக்கிறது. இந்த படத்தை தமிழ்நாட்டு ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்த போதும் ஹிந்தி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் ஜவான் படம் ஷாரூக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஜவான் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருப்பதை அடுத்து மீண்டும் ஷாரூக்கானும், அட்லியும் ஒரு படத்தில் இணைய இருப்பதாக பாலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது ஷாரூக்கான் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்ததும், மீண்டும் அவரை அட்லி இயக்குவார் என்று கூறப்படுகிறது.