சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

கடவுள் ராமரின் மகிமையை தழுவி ஹிந்தியில் ராமாயணா படம் உருவாகிறது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிக்க, பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகிறது. நிதேஷ் திவாரி இயக்குகிறார். இந்நிலையில் கடவுள் விஷ்ணுவின் மற்றுமொரு அவதாரமான பகவான் கிருஷ்ணனை மையமாக வைத்து ‛கிருஷ்ணவதாரம்' என்ற படம் ஹிந்தியில் உருவாகிறது.
கிருஷ்ணராக சித்தார்த் குப்தா, ராதையாக சுஷ்மிதா பட், ருக்மணியாக நிவாஷினி கிருஷ்ணன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். ஹார்திக் கஜார் இயக்குகிறார். இதன் கதையை பிரகாஷ் கபாடியா மற்றும் ராம் மோரி ஆகியோர் எழுதியுள்ளனர். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு பணியை கையாள, பிரசாத் இசையமைத்துள்ளார். மூன்று பாகங்களாக பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் முதல்பாகம் வருகிற மே 7ம் தேதி வெளியாகிறது.
தற்போது படத்தின் டிரைலரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியிட்டுள்ளனர். டிரைலர் வெளியீட்டு விழா 'கிருஷ்ண ஜென்மபூமி'யில் நடந்தது. இந்த நிகழ்வு ஒரே ஒரு இடத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை. ராமன் ரதி கோயில், ராதா ராணி கோயில், பிரேம் மந்திர் மற்றும் இஸ்கான் பிருந்தாவனம் உள்ளிட்ட இடங்களிலும் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வு உண்மையிலேயே ஆன்மிக அனுபவமாக மாற்றியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைத்திருந்ததை காண முடிந்தது.
படத்தின் டிரைலரை பார்க்கையில் அதில் வரும் பிரமாண்ட காட்சிகள், அரண்மனைகள், மாளிகைகள் என ரசிகர்களை வியக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்திரைப்படம் கண்கவர் காட்சிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பார்வையாளர்களை ஒரு ஆழமான உணர்வுபூர்வமான மற்றும் ஆன்மிக பயணத்திற்கும் அழைத்து செல்லும் வகையில் உருவாகி இருக்கிறது.




