Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என்னிடம் தெரிவிக்காமலேயே 30 வயது அதிகமான நடிகருக்கு ஜோடி ஆக்கினார்கள் : மிருணாள் தாக்கூர் வருத்தம்

17 ஏப், 2026 - 04:02 IST
எழுத்தின் அளவு:
They-paired-me-with-an-actor-over-30-years-old-without-informing-me-mrunal-thakur-regrets
Advertisement

தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர். அதேசமயம் அதிக அளவில் இவர் ஹிந்தி படங்களில் தான் நடித்து வருகிறார். கடந்த வருடம் அஜய் தேவகன் நடிப்பில் வெளியான சன் ஆப் சர்தார் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இவர் கணவனை விட்டு பிரிந்து வாழும் மனைவியாகவும் அதேபோல நடிகர் அஜய் தேவ்கன் தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்பவராகவும் இவர்களுக்குள் ஏற்படும் நெருக்கம் நட்பு குறித்தும் இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் மிருணாள் தாக்கூரின் முன்னாள் கணவராக பாலிவுட் சீனியர் நடிகர் சங்கி பாண்டே நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியாகியுள்ள டகாய்ட் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் அளித்த பேட்டியில், சன் ஆப் சர்தார் 2 படத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார் மிருணாள்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”அந்தப் படத்தில் எனக்கு கணவராக ஜோடியாக சீனியர் ஒருவரை தான் (சங்க்கி பாண்டே - 63 வயது) தேர்வு செய்திருந்தார்கள். ஆனால் எனக்கும் அவருக்கும் கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம்.. இது பற்றிய தகவல் எதையும் எனக்கு படக்குழுவினர் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. ஆனாலும் நான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணத்தினால் எந்தவித இடைஞ்சலும் செய்யாமல் அந்த படத்தில் நடித்தேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல்முடிவுக்கு வரும் 'துரந்தர் 2' வசூல் இரண்டு பாகங்களையும் சேர்த்து 3000 கோடி கடந்த 'துரந்தர்' இரண்டு பாகங்களையும் சேர்த்து 3000 கோடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap