விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது |

ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'துரந்தர் தி ரிவெஞ்ச்'. இப்படம் தற்போது வரையில் 1730 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மொத்த வசூல் 1315 கோடிகளையும், நிகர வசூல் 1100 கோடிகளையும் கடந்துள்ளது. வேறு எந்த இந்திய படமும் செய்யாத நிகர வசூலாக 1100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று. வெளிநாடுகளில் 415 கோடிகளையும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இந்தப் படத்திற்குப் போட்டியாக வேறு எந்தப் படமும் வெளியாகவில்லை. நாளை முதல் அக்ஷய் குமார் நடித்துள்ள 'பூத் பங்களா' படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பிரிவியூ காட்சிகளைப் பார்த்தவர்கள் படம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு மேல் 'துரந்தர் 2' வசூல் குறையவே வாய்ப்புகள் அதிகம் என்பதால் அந்தப் படம் 1800 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ள 'பாகுபலி 2' வசூலை நெருங்க வாய்ப்பில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.