50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் | 'தி ராஜா சாப்' போட்டியை சமாளிக்குமா 'ஜனநாயகன்' | 'காட்டி' படத்திற்காக வெளியே வராத அனுஷ்கா | விஷால், சாய் தன்ஷிகாவுக்கு நிச்சயதார்த்தம் : பிறந்தநாளில் இரட்டிப்பு மகிழ்ச்சி | லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பான் இந்தியா திரைப்படமாக மலையாளத்தில் தயாரான ‛கிங் ஆப் கோதா' திரைப்படம் வெளியானது. பிரபல மலையாள சீனியர் இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். சார்பட்டா பரம்பரை புகழ் சபீர் கல்லரக்கல் வில்லனாக நடித்திருந்தார். மிகப்பெரிய ஆக்சன் படமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடுகட்ட தவறியது.
50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மொத்த 40 கோடி மட்டுமே திரையரங்குகள் மூலம் வசூலித்தது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது. சரியாக தற்போது ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் வரும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் இந்த படம் ஹிந்தி ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது.