இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
பழம்பெரும் ஹிந்தி நடிகை மீனா குமாரி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகி ஆனார். சுமார் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பாக்கிஜா, பைஜூ பாவ்ரா, பூல் ஆவுர் பத்தர் போன்ற பல புகழ்பெற்ற படங்கள் இப்போதும் பேசப்பட்டு வருகிறது. அவர் அதிகமான சோகம் ததும்பும் படங்களில் நடித்ததால் 'டிராஜிடி குயின்' என்றே அழைக்கப்பட்டார். தனது 39 வயதில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்து நிஜவாழ்க்கையில் அந்த பட்டத்திற்கு பொருந்தமானவராகிப்போனார். மீனா குமாரியின் வாழ்க்கை தற்போது பாலிவுட்டில் சினிமா ஆகிறது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்கோத்ரா இந்த படத்தை தயாரித்து, இயக்குகிறார். இவர் தமிழில் சிவாஜி, எந்திரன், புலி படங்களில் பணியாற்றி உள்ளார். மீனாகுமாரி வேடத்தில் நடிக்க கிர்த்தி சனோன் தேர்வாகி உள்ளார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.