'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களுக்கு இணையான வரவேற்பை ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் சீரிஸ் உள்ளிட்ட படைப்புகள் பெற்று வருகின்றன. ஆனால் சினிமாவில் சொல்ல முடியாத கதையை, காட்ட முடியாத காட்சிகளை, அநாகரிகமான வார்த்தை, வசனங்களை எளிதாக பயன்படுத்தும் களமாக ஒடிடி தளங்களை மாற்றி விட்டனர். இதனால் ஒடிடி தளங்களுக்கும் சென்சார் வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கான், வெப் சீரிஸ்களின் சமீபத்திய போக்கு குறித்தும் அதற்கு சென்சார் கட்டாயம் வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தி பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சல்மான்கான் பேசும்போது, “தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் பல வெப் சீரிஸ்களில் ஆபாசம், அநாகரிக வார்த்தைகள் என நிறைய இடம் பெற்று வருகின்றன. 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்ப்பது என்றால் ஓகே. ஆனால் இன்று எல்லோர் கைகளிலும் மொபைல் போன் இருப்பதால் உங்களது சின்ன குழந்தை கூட இது போன்ற படங்களை பார்ப்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா ? அதனால் ஓடிடியில் வெளியாகும் படைப்புகளும் நிச்சயமாக சென்சார் செய்யப்பட வேண்டும்.
இதில் என்ன ஆச்சரியம் என்றால், இன்றைய தலைமுறையை சேர்ந்த இளம் நட்சத்திரங்கள், இதுபோன்ற படைப்புகளை சூப்பர், கடின உழைப்பு, திறமை என்கிற வார்த்தைகளால் பாராட்டி வருவது தான்.. அதே சமயம் முன்பை விட தற்போது நல்ல கருத்தாக்கம் கொண்ட ஒரு சில படைப்புகளும் ஓடிடியில் வெளிவருவதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.