இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஹிந்தியில் புதிதாக தயாராகி உள்ள படம் காந்தி கோட்சே : ஏக் யுத். காந்தியை கோட்சே சுட்டுக் கொன்றதை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளது. கமல் தயாரித்து நடித்த ஹே ராம் படமும் அதில் ஒன்று. இந்த படம் வித்தியாசமானது. துப்பாக்கி சூடு சம்பவத்தில் காந்தி உயிர் பிழைத்துக் கொள்கிறார். பின்னர் அவர் சிறையில் இருக்கும் கோட்சேவை சந்திக்கிறார். காந்தி - கோட்சே இடையிலான யுத்தமும், சுதந்திர இந்தியாவில் காந்தி எதிர்கொள்ளும் புதிரான சவால்களுமே இந்த திரைப்படத்தின் கதை. வருகிற ஜனவரி 26ம் தேதி படம் வெளியாகிறது. படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இயக்கி உள்ளார். காந்தியாக தீபக் அந்தானி, கோட்சேவாக சின்மை மன்ட்லேகர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பு செய்கிறார். பிவிஆர் பிக்சர்ஸ் படத்தை வெளியிடுகிறது.