'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ள ஹிந்தி வெப் தொடர் 'தாராவி பேங்க்'. இந்த இணையத் தொடரில் 10 எபிசோட்கள் இருக்கிறது. தாராவியின் பகுதிகளில் 30,000 கோடி ரூபாயை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான நிதி சாம்ராஜ்யத்தை வழி நடத்தக் கூடிய பிடிக்க முடியாத ஒரு தலைவனுக்கும், காவல்துறை அதிகாரிக்குமான மோதல்தான் தொடர். இதில் காவல்துறை அதிகாரி இணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் கவாஸ்கர் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் விவேக் ஓபராய். இந்த கேரக்டரை மோகன்லால் கம்பெனி படத்தில் நடித்த வீரப்பள்ளி ஸ்ரீனிவாசன் என்ற கேரக்டரை காப்பி அடித்து நடித்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சிலருடைய நடிப்பு மட்டும்தான் உங்கள் மனதில் வாழ்நாள் முழுக்க பதிந்திருக்கும். 'கம்பெனி' என்னுடைய முதல் படமாக இருந்தாலும் அதுதான் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்ட களம். அஜய் தேவகனில் இருந்து மோகன்லால் வரையும் பல சிறந்த நடிகர்களுடன் வேலைப் பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.
உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் 'தாராவி பேங்க்' இணையத் தொடரில் நடிப்பதற்காக வீரபள்ளி ஸ்ரீனிவாசன், ஐபிஎஸ் மும்பையின் இணை கமிஷனராக மோகன்லால் சார் நடித்தக் காட்சிகளை நான் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அதில் எப்படி அணுகினார் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது.
மோகன்லால் சாருடைய அந்த நடிப்பு அவருடைய தேர்ந்த அனுபவத்தில் இருந்து வந்ததால் எந்தவொரு சிரமமும் இல்லாமல் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் அந்த கதாபாத்திரத்தை அணுகிய விதம், அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது, படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம் என எல்லா விஷயங்களுமே எனக்கு நினைவில் இருக்கிறது. அவருடைய சில நுட்பங்களை நானும் இதில் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். ஏனெனில், மும்பை போலீஸ் போர்சில் உள்ள பலரும் எனக்குத் தெரியும். மேலும் அவர்களுடைய வழிகாட்டுதலும் எனக்கு உதவியாக இருந்தது.
உண்மையில் இதில் கடினமான ஒரு விஷயம் என்னவென்றால், சரியான விதத்தில் நம்பும்படியாக என் நடிப்பை வெளிப்படுத்துவது மற்றும் அது உயிரோட்டமாக திரையில் கொண்டு வருவது போன்ற விஷயங்கள்தான். மோகன்லால் சார் போல அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.